இருசக்கர வாகனம் ஓட்டும் மாணவர்கள் ஹெல்மெட் அணிவது அவசியம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா பேச்சு


இருசக்கர வாகனம் ஓட்டும் மாணவர்கள் ஹெல்மெட் அணிவது அவசியம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா பேச்சு
x
தினத்தந்தி 21 July 2018 4:00 AM IST (Updated: 21 July 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

இருசக்கர வாகனம் ஓட்டும் மாணவ, மாணவிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும், என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கேட்டு கொண்டார்.

தூத்துக்குடி, 

இருசக்கர வாகனம் ஓட்டும் மாணவ, மாணவிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும், என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கேட்டு கொண்டார்.

சிறப்பு முகாம்

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் சேரகுளம்-ராமானுஜம்புதூர் கிராமத்தில் நடந்தது. முகாமை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். முகாமின் நிறைவு விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, தூத்துக்குடி குற்றவியல் நீதிபதி தமிழ்செல்வி, வேளாண்மை கல்லூரி முதல்வர் ராமலிங்கம், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு சகாய சோஸ் மற்றும் ராமானுஜம்புதூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சோபா வரவேற்றார்.

சமூக பணிகள்

முகாமி நிறைவு விழாவுக்கு கல்லூரி முதல்வர் ராமலிங்கம் தலைமை வகித்து பேசியதாவது:- கலெக்டர் உத்தரவின் பேரில் ராமானுஜம்புதூரை பிளாஸ்டிக் இல்லாத தூய்மையான ஊராக மாற்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளோம். விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் காளான் வளர்ப்பு, தேனி வளர்ப்பு, வாழை மற்றும் தென்னையில் சாகுபடி அதிகரித்தல் குறித்த வகுப்புகள், இலவச கால்நடை மருத்துவ முகாம், பொது மருத்துவ முகாம், கண் மருத்துவ முகாம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதுபோன்ற கல்லூரியின் சமூக பணிகள் தொடரும், என்றார்.

ஹெல்மெட் அவசியம்

விழாவில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகளுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா பேசுகையில்,‘ கல்லூரி மாணவ, மாணவியர் கல்வியோடு இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் மனோபாவத்தை பெற்றிட வேண்டும். மேலும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் மாணவர்களின் பங்களிப்பு அவசியம். இருசக்கர வாகனம் ஓட்டும் மாணவ, மாணவியர் ஹெல்மெட் கண்டிப்பாக அணிய வேண்டும். இதில் அவர்களின் பங்களிப்பு மிக மிக அவசியம், என்றார்.

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜாபாபு நன்றி கூறினார்.

Next Story