திருத்தணி, பொன்னேரியில் இன்று மின்தடை


திருத்தணி, பொன்னேரியில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 20 July 2018 8:43 PM GMT (Updated: 20 July 2018 8:43 PM GMT)

இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் திருத்தணி நகரம், அகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

திருத்தணி,

திருத்தணி கோட்டத்தில் உள்ள திருத்தணி மற்றும் பூனிமாங்காடு துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. ஆகவே திருத்தணி நகரம், அகூர், பொன்பாடி, லட்சுமாபுரம், சின்னகடம்பூர், அருங்குளம், மத்தூர், பூனிமாங்காடு, என்.என்.கண்டிகை, சிவாடா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என திருத்தணி கோட்ட மின்வாரியத்துறை செயற்பொறியாளர் கனகராஜன் தெரிவித்தார்.

பொன்னேரி- திருவொற்றியூர் நெடுஞ்சாலை பொன்னேரி பகுதியில் மின் கம்பங்கள் மாற்றும் பணி இன்று நடைபெற உள்ளது. இந்த பணிக்காக பொன்னேரி, கிருஷ்ணாபுரம், சின்னகாவனம், பெரியகாவனம், காட்டாவூர் உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று பொன்னேரி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் துணைமின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திருவள்ளூர் நகரத்தில் உள்ள ஜே.என்.சாலை, ரெயில் நிலையம் முதல் எல்.ஐ.சி. வரை, பூங்காநகர், ஐ.ஆர்.என். பின்புறம், புங்கத்தூர், சேலை, ஏகாட்டூர், வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், ராஜாஜிபுரம், பெரியக்குப்பம், மணவாளநகர், ஒண்டிக்குப்பம், அதிகத்தூர், போளிவாக்கம், பாப்பரம்பாக்கம், கொப்பூர், ராமஞ்சேரி, பாண்டூர், பட்டரைபெரும்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடைபட்டிருக்கும் என திருவள்ளூர் மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Next Story