நாகர்கோவிலில் நகராட்சி நிலத்தை மீட்க சென்ற அதிகாரிக்கு மிரட்டல் போலீஸ் விசாரணை


நாகர்கோவிலில் நகராட்சி நிலத்தை மீட்க சென்ற அதிகாரிக்கு மிரட்டல் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 22 July 2018 4:00 AM IST (Updated: 21 July 2018 8:49 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் நகராட்சி யில் குத்தகை காலம் முடிந்த பிறகும்ஒப்ப டைக்காத நிலத்தை மீட்க சென்ற அதிகா ரிக்கு மிரட்டல் விடுக்கப் பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குத்தகை காலம் முடிந்த கடைகள் மற்றும் நிலங்களை மீட்டு மீண்டும் நகராட்சியிடம் ஒப்படைக்கவும் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவிட் டுள்ளார். அதன்படி அதிகாரி கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் வடசேரி ராஜபாதையில் நகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான 15 சென்ட் காலி நிலம் உள்ளது. இந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர், குத்தகை காலம் முடிந்த பிறகும் நிலத்தை நகராட்சியிடம் ஒப்படைக்க வில்லை என்று கூறப்படு கிறது.

அதைத் தொடர்ந்து நகர அமைப்பு ஆய்வாளர் சந்தோஷ்குமார் (வயது 29) தலைமையில் அதிகாரிகள் நிலத்தை மீட்டு நகராட்சி வசம் கொண்டு வருவதற்காக சென்றனர். அதிகாரிகள் நிலத்தை ஆய்வு செய்து கொண்டிருந்த போது, அப்பகுதியை சேர்ந்த சிலர் அங்கு வந்து, அதிகாரிகளை அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததோடு மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ்குமார் உடனே இதுபற்றி வடசேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர் களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நகராட்சி நிலத்தை மீட்க சென்ற அதிகாரிக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story