தனியார் துறைமுகத்தில் கிரண்பெடி ஆய்வு பொதுமக்கள் தெரிவிக்கும் புகார் ரகசியம் காக்கப்படும் என பேட்டி


தனியார் துறைமுகத்தில் கிரண்பெடி ஆய்வு பொதுமக்கள் தெரிவிக்கும் புகார் ரகசியம் காக்கப்படும் என பேட்டி
x
தினத்தந்தி 21 July 2018 10:45 PM GMT (Updated: 21 July 2018 4:29 PM GMT)

வாஞ்சூர் தனியார் துறைமுகத்தில் ஆளுநர் கிரண்பெடி ஆய்வு பொதுமக்கள் தெரிவிக்கும் புகார் ரகசியம் காக்கப்படும் என பேட்டி.

நாகூர்,

காரைக்கால் மாவட்டம் வாஞ்சூரில் உள்ள தனியார் துறைமுகத்தில் புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண்பெடி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது துறைமுக அலுவலகத்தின் ஆவணங்களை பார்வையிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

காரைக்கால் துறைமுகத்தின் மீது பொதுமக்கள் பல புகார்கள் கொடுத்ததையடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிலக்கரி துகள்கள், காற்றில் பரவுவதை கேமராக்கள் மூலம், பதிவு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்படும். நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை கண்காணித்து கடல்நீரை சுத்திகரித்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால் தனியார் துறைமுகம் மீது பொதுமக்கள் எந்த புகார் வேண்டுமானாலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்கள் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story