தமிழகத்தில் முதல் கட்டமாக 985 கிராம சுகாதார செவிலியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்


தமிழகத்தில் முதல் கட்டமாக 985 கிராம சுகாதார செவிலியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்
x
தினத்தந்தி 21 July 2018 10:45 PM GMT (Updated: 21 July 2018 7:38 PM GMT)

தமிழகத்தில் முதல் கட்டமாக 985 கிராம சுகாதார செவிலியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காசநோய் குறித்த ஆய்்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். கலெக்டர் கணேஷ் முன்னிலை வகித்தார். இதில் பொதுசுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி உள்பட பலர் கலந்து கொண்டார்.

தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் தான் அனைவருக்கும் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் துணை சுகாதார நிலையங்களில் கிராமப்புற செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் உள்ள 8 ஆயிரத்து 706 கிராம சுகாதார மையங்களில் 8 ஆயிரத்து 706 கிராம சுகாதார செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதை இரட்டிப்பாக்கும் முயற்சியை அரசு எடுத்துள்ளது. தமிழகத்தில் முதல் கட்டமாக 985 கிராம சுகாதார செவிலியர்கள் இந்த ஆண்டு புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். எய்ட்ஸ் நோயின் தாக்கத்தை இந்திய அளவில் தமிழகம் கட்டுப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் 1 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் நோய் தாக்கம் உள்ளது என வெளியாகி உள்ள தகவல் தவறானது, என்றார். 

Next Story