போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
திருத்துறைப்பூண்டியில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளு,முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, இந்திய மாணவர் சங்க தலைவர் தெட்சிணாமூர்த்தியை தாக்கி கைது செய்த திருவாரூர் தாலுகா போலீசாரை கண்டித்தும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் திருத்துறைப்பூண்டியில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், நகர செயலாளர் ரகுராமன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஜோதிபாசு, பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின்போது போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளு,முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாபன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
அதேபோல திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சாமியப்பன், ராமசாமி, கோமதி, ஒன்றிய செயலாளர் பவுன்ராஜ், நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டு, போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகளை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்தார். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
முத்துப்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு வட்டார, நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போலீசாரை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் தமிழ்மணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர செயலாளர் காளிமுத்து, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, கனகசுந்தரம், ராஜேந்திரன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story