சென்னை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்


சென்னை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 July 2018 10:45 PM GMT (Updated: 21 July 2018 9:22 PM GMT)

சென்னை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் மாதர் சங்கம் சார்பில் நடந்தது.

நாகப்பட்டினம்,

சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கண்டித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரியும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நாகை புதிய பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேகலா தலைமை தாங்கினார். கீழையூர் முன்னாள் ஒன்றிய தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், துணை செயலாளர் நாராயணன், பொருளாளர் ராமலிங்கம், கீழையூர் ஒன்றிய செயலாளர் செல்வம், கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தை சேர்ந்தவர்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர். 

Next Story