வெளி மாவட்டங்களில் இருந்து சரக்குகள் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு 5 பேர் கைது
புதுக்கோட்டையில் வெளி மாவட்டங்களில் இருந்து சரக்குகளை ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை,
தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை விலை மாற்றத்தை கண்டித்தும், 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்பபெற கோரியும் மற்றும் சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். நாள்பட்ட சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். பெட்ரோல், டீசலுக்கு தமிழக அரசால் விதிக்கப்படும் வாட் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 20-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட கிளை சிறையின் எதிரே உள்ள மார்க்கெட்டில் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுமார் ஆயிரத்து 700 லாரிகள் கலந்து கொண்டு உள்ளன.
இந்நிலையில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்குகளை ஏற்றி வந்த 12 லாரிகளை புதுக்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தடுத்து அனைத்து லாரிகளும் வேலை நிறுத்தத்தில் உள்ளது. நீங்கள் எப்படி லாரிகளை இயக்கலாம் எனக்கூறி சிறைபிடித்து, புதுக்கோட்டையில் உள்ள லாரி மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் ஆகியோர் தலைமையிலான டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பேச்சுவார்த்தை நடத்தி, லாரிகளை விடுவித்தனர்.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போஸ், சரவணன், செபஸ்தியான், வெள்ளைச்சாமி, சேகர் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணிக்காக லாரி மார்க்கெட்டில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Related Tags :
Next Story