சமையல்காரரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்தவர் கைது


சமையல்காரரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 24 July 2018 3:15 AM IST (Updated: 24 July 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் சமையல்காரரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்தவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

காரைக்குடி,

காரைக்குடி என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்தவர் அறிவுராஜ் (வயது 55). இவர் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஸ்டோர் கீப்பராக வேலை செய்துவந்தார். அவர் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகளின்பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் சூடாமணிபுரத்தை சேர்ந்த சமையல்காரரான ராஜகோபால் என்பவரிடம் அறிவுராஜ் சென்று போலீஸ் அலுவலகத்தில் வேலை செய்வதாகவும், அங்கு திருடுபோய் மீட்கப்பட்ட நகைகள் இருக்கின்றன, அவற்றை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாகவும் கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவுராஜை கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட அறிவுராஜ் மீது காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story