ஜி.எஸ்.டி.யில் இருந்து அரிசி, கோதுமைக்கு விலக்கு அளிக்க வேண்டும்
ஜி.எஸ்.டி.யில் இருந்து அரிசி, கோதுமைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று, அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர்,
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர் சங்கங்களின் மாநில சம்மேளன பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில சம்மேளன தலைவர் துளசிங்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரவை முகவர்கள் சங்கங்களின் சம்மேளன செயலாளர் இமாவீரன், மாவட்ட தலைவர்கள் விஜயகுமார் (தஞ்சை), குணசேகரன் (திருவாரூர்), பச்சையப்பன் (நாகை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் வாசன் வரவேற்றார்.
சம்மேளன செயல்பாடுகள் குறித்து மாநில செயலாளர் மோகன் பேசினார். பொருளாளர் சுப்பிரமணி நிதிநிலை அறிக்கை வாசித்தார். மாநில ஆலோசகர் ஜெகதீசன், தமிழ்நாடு அரசு முகவர்கள் சங்கங்களின் சம்மேளன ஆலோசகர் சந்திரசேகரன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமைக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு வெளியில் நடைபெறும் வணிகத்திற்கு விற்பனை கூடத்தின் அதிகாரிகள் சந்தை கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும்.
தமிழ்நாடு வேளாண்மை விளை பொருள் விற்பனை சட்டத்தின்படி குறிப்பிட்ட பகுதியில் விளையும் உணவு தானியங்கள் அப்பகுதியில் இருக்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு எடுத்து வரும்போது அந்த வேளாண்மை பொருட்களுக்கு மட்டுமே சந்தை கட்டணம் வசூலிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வேளாண்மைத்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் இருந்து வணிகர்கள் நேரடியாக கொள்முதல் செய்யும் உணவு தானியங்களுக்கும், பிற மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யும் உணவு தானியங்களுக்கும் சந்தை கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 277 வேளாண்மை விற்பனை கூடங்களையும் தமிழகஅரசு நவீன கட்டமைப்பு வசதிகளோடு மாற்றி அமைக்க வேண்டும். வேளாண்மை விளை பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே எங்கள் கோரிக்கையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசீலனை செய்து ஆவன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சோழ மண்டல நெல், அரிசி மொத்த வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் கோபாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் தமிழ்வாணன், செயலாளர் கதிரவன், பொருளாளர் ராஜேந்திரன், துணைத்தலைவர் ரவிச்சந்திரன், துணை செயலாளர் சுந்தர் மற்றும் மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கனகராஜன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story