வெடிகுண்டு வீசி ரியல் எஸ்டேட் அதிபர் கொலை: கூலிப்படையை ஏவிய அமெரிக்க தம்பதிக்கு வலைவீச்சு
சொத்து தகராறில் ரியல் எஸ்டேட் அதிபரை கூலிப்படையை ஏவி அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி கொலை செய்து பழி வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வானூர்,
விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் பாபு என்ற கோதண்டராமன் (வயது 42), ரியல் எஸ்டேட் அதிபர். இவர், கடந்த 21-ந் தேதி மாலை மோட்டார் சைக்கிளில் ஆரோவில் பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த ஒரு கும்பல், நாட்டு வெடிகுண்டு வீசியும், பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியும் பாபுவை படுகொலை செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக பாபுவின் அண்ணன் முருகன் கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய் தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சஞ்சீவி ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாபுவுக்கும், அவரது உறவினர் ராமு என்பவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்துவந்தது. இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ராமுவும், அவரது மனைவியும் அமெரிக்காவில் வசித்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமுவும் அவரது மனைவியும் அமெரிக்காவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தனர். இவர்கள் பாபு கொலைக்கு பிறகு மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள், நிலப்பிரச்சினை தொடர்பாக கூலிப்படையை ஏவி பாபுவை கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். தலைமறைவாக உள்ள அவர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் பாபு கொலையில் ஈடுபட்ட கூலிப்படையினர் விழுப்புரம் மற்றும் மதுரை நீதிமன்றங்களில் சரணடைய திட்டமிட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் விழுப்புரம், மதுரையில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story