4-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் - டீசல் விற்பனை 80 சதவீதம் குறைந்தது; காய்கறி விலையில் மாற்றம் இல்லை
நேற்று 4-வது நாளாக வேலூர் மாவட்டத்தில் 100 சதவீத லாரிகள் ஓடவில்லை.
வேலூர்,
காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் 4-வது நாளான நேற்று வேலூர் மாவட்டத்தில் 100 சதவீத லாரிகள் ஓடவில்லை. இதனால் 80 சதவீதம் வரை டீசல் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காய்கறிகளின் விலையில் மாற்றம் இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும். நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு ஒரே சீரான விலையை நிர்ணயிக்க வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் வசூலிக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 20-ந் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் லாரிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல்நாள் போராட்டத்தின்போது பல்வேறு காரணங்களால் 20 சதவீத லாரிகள் ஓடியதாக லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நேற்று 4-வது நாளாக இந்த வேலைநிறுத்த போராட்டம் நீடித்தது. மாவட்டம் முழுவதும் 100 சதவீத லாரிகள் ஓடவில்லை என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அரசு பஸ்களில் கொண்டு செல்லலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
ஆனால் அரசு பஸ்களில் காய்கறிகளை கொண்டு சென்றால் ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தங்களிலேயே காய்கறிகளை இறக்க வேண்டி உள்ளது. பின்னர் அங்கிருந்து மார்க்கெட்டிற்கு கொண்டுசெல்ல விவசாயிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். சிலர் மினிவேன்கள் மூலம் காய்கறிகளை கொண்டு வருகிறார்கள்.
லாரிகள் வேலைநிறுத்தம் நடந்தாலும் நேற்றுவரை வேலூரில் காய்கறி விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர். அதேநேரத்தில் பெங்களூருவில் இருந்து வரக்கூடிய சவ்சவ், நூக்கல் போன்ற காய்கறிகள் வரவில்லை. காய்கறிகள் வரத்தில் பாதிப்பு இல்லை என்றாலும் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அதேபோன்று லாரிகளை ஓட்டாமல் ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளதால் பெட்ரோல் பங்க்குகளில் டீசல் விற்பனை குறைந்து விட்டது. வேலூர் மாவட்டத்தில் டீசல் விற்பனை 80 சதவீதம் குறைந்து விட்டதாக வேலூர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவரும், பெட்ரோல் பங்க் உரிமையாளருமான செல்வகுமார் தெரிவித்தார்.

Related Tags :
Next Story