தூர்வாரப்படாத வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் போராட்டம்
சோமரசம்பேட்டை அருகே தூர்வாரப்படாத வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால், விவசாயிகள் வாய்க்காலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
சோமரசம்பேட்டை,
திருச்சி மாவட்டம், பழைய கட்டளை மேட்டு வாய்க்காலில் தூர்வாரப்படாமல் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சோமரசம்பேட்டை அருகே உள்ள தாயனூர் சந்தை என்னுமிடத்தில் செல்கின்ற பழைய கட்டளை மேட்டு வாய்க்காலில் அமர்ந்து விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் ம.ப.சின்னதுரை தலைமை தாங்கினார். விவசாய அணியை சேர்ந்த துரைபாண்டியன், போதாவூர் கணேசன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் கடைமடை பகுதி வரை தடையின்றி தண்ணீர் வருவதற்கு வாய்க்கால் பகுதிகளை தூர்வாரவும், குழுமி ஷட்டர்களை சரி செய்து தர வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் பதாகைகளை ஏந்தியும், கருப்புக்கொடி காட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பழைய கட்டளை மேட்டு வாய்க்கால் உதவி பொறியாளர் கொளஞ்சிநாதன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கடைமடை பகுதியில் தற்போது பணிகள் எதுவும் செய்ய முடியாத நிலை குறித்து எடுத்து கூறினார். அதனை ஏற்காத விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர்.

Related Tags :
Next Story