தொழில் மற்றும் அரசியல் போட்டியால் கூலிப்படையை ஏவி அ.தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்டது அம்பலம்
தொழில் மற்றும் அரசியல் போட்டியால் கூலிப்படையை ஏவி சீர்காழி அ.தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சீர்காழி,
நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா எடமணல் கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ரமேஷ்பாபு(வயது 47). இவர் நேற்று முன்தினம் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் ரமேஷ்பாபு, ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் இருந்து வந்தார். கடந்த 2001-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது அ.தி. மு.க.வை சேர்ந்த சந்திரமோகன் வெற்றி பெற பாடுபட்டார். அவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவரது உதவியாளரானார்.
அந்த காலகட்டத்தில் ரமேஷ்பாபு சிறு, சிறு ஒப்பந்த பணிகளை செய்து வந்தார். தொடர்ந்து அகல ரெயில்பாதை, புறவழிச்சாலை போன்ற பல்வேறு ஒப்பந்த தொழிலில் அதிக தீவிரம் காட்டினார். அப்போது மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியனிடம் நல்ல நட்பும், ஆதரவோடும் இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் ஓ.எஸ்.மணியன் கட்சி பணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அப்போதும் ஓ.எஸ்.மணியனுக்கு ரமேஷ்பாபு ஆதரவாக இருந்து வந்தார். அந்த காலகட்டத்தில் வேறொரு மாவட்ட அமைச்சரின் ஆதரவோடு மாநில அளவில் ஒப்பந்த பணிகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஓ.எஸ்.மணியனை மாவட்ட செயலாளராக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீண்டும் அறிவித்ததை அடுத்து வேதாரண்யம் தொகுதியில் நின்று வெற்றி பெற்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சராக ஓ.எஸ்.மணியன் ஆனார்.
இதனால் ரமேஷ்பாபுவின் செல்வாக்கு மாவட்டம் முழுவதும் அரசியல் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் ஓங்கத் தொடங்கியது. இதனிடையே சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ.வான பாரதியின் வெற்றிக்கும் உழைத்த ரமேஷ்பாபு, எம்.எல்.ஏ.வின் மனதிலும் நீங்கா இடம் பெற்றார். இதனால் கட்சியினர் சிலரிடையே ரமேஷ்பாபு மீது போட்டியும், பொறாமையும், தொழில் போட்டியும் மறைமுகமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியில் மணல் அள்ளிப்போடும் ஒப்பந்தத்திற்கு பல்வேறு ஒப்பந்தக்காரர்கள் போட்டியிட்டனர். ஆனால் ரமேஷ்பாபு, பல்வேறு தடைகளையும் தாண்டி அந்த ஒப்பந்தத்தை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் போட்டிகளும், விரோதமும் மேலும் அதிகமானது.
எனவே தொழில் மற்றும் அரசியல் போட்டியால் முன்விரோதம் காரணமாக யாரோ சிலர் பிரபல ரவுடியின் ஆதரவோடு கூலிப்படையை ஏவி ரமேஷ்பாபுவை படுகொலை செய்திருக்கலாம் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு நபர்களிடம் சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக கூலிப்படையினர் கோர்ட்டில் சரண் அடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தீவிர தேடுதல் வேட்டை
அ.தி.மு.க. பிரமுகர் ரமேஷ்பாபு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட சிலமணி நேரத்திலேயே போலீசார், சீர்காழி நகர் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சோதனையிட்டனர். அதில் கொலையாளிகள் பற்றிய சில தடயங்கள், தகவல்கள் கிடைத்ததை வைத்து கொண்டு புலன் விசாரணையில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தஞ்சை, கடலூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Tags :
Next Story