வறண்டு கிடக்கும் காவிரி கரையில் வெள்ள அபாய எச்சரிக்கை பொதுமக்களை ஆச்சரியப்படுத்திய பேனர்


வறண்டு கிடக்கும் காவிரி கரையில் வெள்ள அபாய எச்சரிக்கை பொதுமக்களை ஆச்சரியப்படுத்திய பேனர்
x
தினத்தந்தி 25 July 2018 4:15 AM IST (Updated: 25 July 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

திருவிடைமருதூரில், வறண்டு கிடக்கும் காவிரி ஆற்றின் கரையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து தொங்கவிடப்பட்டுள்ள பேனர் பொதுமக்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

திருவிடைமருதூர்,

மேட்டூர் அணை மற்றும் கல்லணை திறந்து விடப்பட்டுள்ளதால் தஞ்சை மாவட்டத்தில் ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்லணை திறக்கப்பட்டு 3 நாட்களாகியும் திருவிடைமருதூர் காவிரி ஆற்றுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. காவிரி ஆற்றில் நடைபெறும் பாலம் கட்டும் பணி, படித்துறை கட்டும் பணி உள்ளிட்டவற்றின் காரணமாக திருவிடைமருதூர் பகுதிக்கு தண்ணீர் விடப்படவில்லை.

இங்கு திறந்து விடப்பட வேண்டிய தண்ணீர், வெண்ணாறு, வெட்டாறுக்கு மடை மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இதனால் திருவிடைமருதூரில் உள்ள காவிரி ஆறு வறண்டு கிடக்கிறது.

இந்த நிலையில் திருவிடைமருதூர் காவிரி ஆற்றின் கரையில் தாசில்தார் அலுவலகம் சார்பில் தொங்கவிடப்பட்டுள்ள பேனரில், அதிகளவில் தண்ணீர் செல்வதால் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீரே இல்லாமல் ஆறு வறண்டு கிடக்கும் நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு தொங்க விடப்பட்டுள்ள பேனர் பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Next Story