இஸ்ரோ செயற்கைகோள் மைய இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இந்த மாதம் ஓய்வு பெறுகிறார்
இஸ்ரோ செயற்கைகோள் மைய இயக்குனரான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இந்த மாதம் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
பெங்களூரு,
பெங்களூருவில் இந்திய விண்வெளி ஆய்வு மையம்(இஸ்ரோ) உள்ளது. அங்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மைய இயக்குனராக மயில்சாமி அண்ணாதுரை பணியாற்றி வருகிறார். விஞ்ஞானியான அவர் நிலவை ஆய்வு செய்ய கடந்த 2008-ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திராயன்-1 விண்கலத்தை உருவாக்கியதில் மிக முக்கிய பங்கை ஆற்றியவர் ஆவார். இது அவருக்கு இந்திய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதன் பிறகு அவருக்கு பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கி கவுரவித்தன. கடந்த ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
சந்திராயன்-1 வெற்றியை தொடர்ந்து மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் ரூ.800 கோடி செலவில் சந்திராயன்-2 விண்கலம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அது தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. மயில்சாமி அண்ணாதுரை 1982-ம் ஆண்டு இஸ்ரோவில், பணியில் சேர்ந்தார். இந்த சந்திராயன்-2 விண்கலம் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் அந்த பணிகள் நிறைவடையாததால், அது ஒத்திவைக்கப்பட்டது. வருகிற அக்டோபர் மாதம் அந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சந்திராயன்-2 விண்கலத்தை உருவாக்கும் முயற்சியில் மயில்சாமி அண்ணாதுரை கடந்த சில ஆண்டுகளாக மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் அந்த விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு முன்னரே அவர் இந்த மாதத்துடன் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Tags :
Next Story