ஆயக்காரன்புலம் - தென்னம்புலம் சாலை சீரமைக்கும் பணி திடீர் நிறுத்தம் பொதுமக்கள் அவதி
ஆயக்காரன்புலம் - தென்னம்புலம் சாலை சீரமைக்கும் பணி திடீரென நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
வாய்மேடு,
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலத்தில் இருந்து தென்னம்புலம் செல்லும் சாலை உள்ளது. தென்னம்புலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் நாள்தோறும் இந்த சாலையின் வழியாக தான் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும், இந்த பகுதிக்கு மினிபஸ் ஒன்றும் இயக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாரத பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இந்த சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதன் முதற்கட்ட பணிகளாக சாலையின் ஓரத்தில் உள்ள வாய்க்காலின் ஒரு பகுதியில் கான்கிரீட் தடுப்பு சுவர் எழுப்பப்பட்டு பணிகள் நடைபெற்றன.
மேலும், சாலை சீரமைப்பதற்கு தேவையான ஜல்லி கற்கள் சாலையில் கொட்டப்பட்டன. சாலை சீரமைப்பதற்காக ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளதாலும், ஜல்லிகள் சாலையில் கொட்டப்பட்டுள்ளதாலும் மினி பஸ் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் மேற்கண்ட பகுதிக்கு செல்லும் மினிபஸ் நிறுத்தப்பட்டது.
சாலை அமைக்கும் பணி சில நாட்கள் நடைபெற்றன. திடீரென இந்த பணி நிறுத்தப்பட்டன. இதனால் இப்பகுதி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சுமார் 20 நாட்களுக்கும் மேலாக பணிகள் நடைபெறாததால் சாலை பணி நடக்குமா? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சாலை சீரமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் விரைவில் பொதுமக்களை ஒன்று திரட்டி ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story