முக்கொம்பில் வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு: கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
முக்கொம்பில் வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் வீடுகளை சூழ்ந்தது. இதில் சலவை தொழிலாளர்களின் குடிசைகள் நீரில் அடித்து செல்லப்பட்டன.
திருச்சி,
மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதை தொடர்ந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக கடந்த 22-ந்தேதியில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
காவிரியில் வெள்ள அபாயத்தை தடுப்பதற்காக திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து நேற்று முன்தினம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதலில் வினாடிக்கு 150 கன அடியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் இரவில் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
இதனால் கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. கொள்ளிடம் ஆற்றில் கடந்த 2013-ம் ஆண்டு சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் ஐந்தாண்டுகளுக்கு பின்னர் இப்போது தான் தண்ணீர் செல்கிறது.
தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை கொள்ளிடம் பழைய இரும்பு பாலம், புதிய பாலங்களில் நின்று பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். கொள்ளிடம் ஆற்றின் நடுவில் சலவை தொழிலாளர்கள் அமைத்து இருந்த குடிசைகளை தண்ணீர் அடித்து சென்று விட்டது. சலவை தொழிலாளர்கள் கட்டி வைத்து இருந்த தண்ணீர் தொட்டிகளும் நீரில் மூழ்கி விட்டன.
கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. வாழவந்தி புரம் என்ற இடத்தில் ஆற்றின் கரையில் உள்ள பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மாட்டுவண்டி தொழிலாளர்கள் பழைய இரும்பு பொருட்களை போட்டு வைத்திருந்த சரக்கு வேனின் பொருட்கள் ஏற்றி செல்வதற்கான பெட்டியும் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடத்தில் தண்ணீர் தொடர்ந்து அதிகமாகவே சென்று கொண்டிருக்கிறது. இதனால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு வேறு இடங்களுக்கு சென்றனர்.
காவிரியிலும் 30 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஆறு படிக்கட்டுகள் தண்ணீரில் மூழ்கி விட்டன. நிரந்தர இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ள பகுதியில் மட்டும் பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மற்ற இடங்களில் சவுக்கு கட்டைகள் அமைத்து குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தீயணைப்பு படையினரும் தயார் நிலையில் காவிரி கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். அம்மா மண்டபம் சாலையில் உள்ள கருட மண்டபம் படித்துறை, ஓயாமரி சுடுகாடு அருகே தில்லைநாயகம் படித்துறைகள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டு விட்டன.

Related Tags :
Next Story