குடிபோதையில் பொதுமக்கள், ஜீப், கார்கள் மீது தாக்குதல் போலீஸ்காரர் மகன் உள்பட 5 பேர் கைது
பெரம்பலூரில் நள்ளிரவில் குடிபோதையில் பொதுமக்கள், ஜீப், கார்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்திய போலீஸ்காரர் மகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் துறைமங்கலம் கே.கே.நகர் சாலை அருகே எல்.கே.எஸ்.ரெசிடென்சி என்கிற தனியார் தங்கும் விடுதி உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த விடுதியின் மொட்டை மாடியில் அமர்ந்து ஒரு கும்பல் மது அருந்தி கொண்டிருந்தனர். இந்நிலையில், போதை தலைக்கேறியதால் அந்த கும்பல் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், மொட்டை மாடியில் இருந்து காலி மது பாட்டில்கள் மற்றும் கற்கள் ஆகியவற்றை விடுதி அருகே இருந்த ஜெயராமன் என்பவரது ஓட்டு வீட்டின் மீது சரமாரியாக எறிய தொடங்கினர்.
இதில் அந்த வீட்டின் ஓடுகள் உடைந்து, அந்த ஓட்டையின் வழியாக கற்கள், மது பாட்டில்கள் ஆகியவை வீட்டிற்குள் விழுந்தன. இந்த சத்தத்தை கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஜெயராமனின் மனைவி ராஜேஸ்வரி எழுந்து அந்த கும்பலிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து ராஜேஸ்வரியை தகாத வார்த்தையால் திட்டி, நாங்கள் ரவுடிகள் என்றும் அவரை தாக்கினர்.
பின்னர் அந்த கும்பல் கே.கே.நகர் சாலையில் வசிக்கும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட ஆரம்பித்தனர். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை தாக்கினர். இதை தட்டி கேட்ட அந்த பெண்ணின் கணவரான திருமாறனையும் அந்த கும்பல் தாக்கியது. இந்நிலையில் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வரும் முருகேசன் (வயது 48) என்பவரும் அவர்களை தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் மது பாட்டிலால் முருகேசனின் தலையில் தாக்கினர். இதில் முருகேசன் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியே வந்தது. நள்ளிரவில் குடிபோதையில் ஒரு கும்பல் வெறிச்செயலுடன் பொதுமக்களை தாக்கி கொண்டிருக்கும் சம்பவம் அந்தப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே காட்டு தீ போல் பரவியது.
இதனால் பொதுமக்கள் திரண்டனர். ஆனால் பொதுமக்களின் பிடியில் இருந்து சிக்காமல் இருக்க அந்த கும்பல் சாலையில் நின்று கொண்டிருந்த திருமாறனின் ஜீப்பின் கண்ணாடியை கட்டையால் தாக்கி உடைத்து விட்டும், மேலும் அண்ணாதுரை, கீர்த்தி சேகரன் என்பவர்களின் கார்களின் கண்ணாடிகளையும் கட்டையால் தாக்கி உடைத்து விட்டு தப்பி சென்றனர்.
குடிபோதையில் நள்ளிரவில் பொதுமக்களை தாக்கியும், சாலையில் நின்று கொண்டிருந்த ஜீப், கார்களின் கண்ணாடியை உடைத்த கும்பலை உடனடியாக போலீசார் கைது செய்யக்கோரியும், கடந்த சில மாதங்களாகவே அந்த தனியார் தங்கும் விடுதியில் தங்குபவர்கள் போதையில் பெண்களை கேலி, கிண்டல் செய்து வருவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விடுதியின் கண்ணாடி கதவுகளை உடைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் அதே பகுதியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தலின் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு குமரவேலு தலைமையில் போலீசார் முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் குடிபோதையில் தகராறு செய்த அந்த கும்பலை இரவோடு, இரவாக கைது செய்து விடுவோம் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அந்த கும்பலை சேர்ந்த பெரம்பலூர் காவலர் குடியிருப்பை சேர்ந்த செல்வத்தின் மகன் சூர்யா (23), பெரம்பலூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த யேசுதாஸ்(23), ராமநாதன் மகன் ரவிகரன்(23), சாமியப்ப நகரை சேர்ந்த முகமது சமீர்(23), எளம்பலூரை சேர்ந்த செல்வராஜ் மகன் விக்னேஷ்வரன்(25) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவானவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைதான சூர்யா என்பவரின் தந்தை செல்வம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையம் ஒன்றில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் நண்பன் போலீசார் என்று இருக்கிற சூழ்நிலையில், ஒரு போலீஸ் ஏட்டுவின் மகன் கும்பலுடன் சேர்ந்து குடிபோதையில் பொதுமக்களை, கார் கண்ணாடிகளை தாக்கிய சம்பவம் பொதுமக்கள் மற்றும் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பல் தாக்கியதில் காயமடைந்த முருகேசன் உள்பட 4 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

Related Tags :
Next Story