ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையின் வலது மற்றும் இடது புற கால்வாய், பிரிவு கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு, மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு, அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார்.
பின்னர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய் மற்றும் பிரிவு கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்தம் 8,000 ஏக்கர் புன்செய் நிலங்கள் பயன் அடைகின்றன. தட்டகானபள்ளி, பூதிநத்தம், பெத்த முத்தாளி, முத்தாளி, அட்டூர், கதிரேபள்ளி, மாரசந்திரம், கொத்தூர், மோரனபள்ளி உள்ளிட்ட 22 கிராமங்கள் பயன்பெறும். அணையின் நீர் இருப்பு மற்றும் அணைக்கு வரும் நீர்வரத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 150 நாட்களுக்கு சுழற்சி முறையில் முதல் 10 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்தும், அடுத்த 5 நாட்கள் நிறுத்தியும் தண்ணீர் வழங்கப்படும். தண்ணீர் திறந்து விடப்படும் காலங்களில் இரு கால்வாய்களிலும் மொத்தம் 88 கன அடி, வினாடி வீதம் திறந்து விடப்படும். விவசாயிகள் நீர் பங்கீட்டில் பொதுப்பணித்துறையினருடன் ஒத்துழைத்து, நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறும் நோக்கத்துடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், ஓசூர் வருவாய் கோட்ட அலுவலர் விமல்ராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) மெய்யழகன், ஓசூர் தாசில்தார் முத்துப்பாண்டி, ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்னகிருஷ்ணன், விமல்ரவிக்குமார், சூளகிரி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ஏ.வி.எம்.மது என்ற ஹேம்நாத், மாவட்ட பிரதிநிதி சிட்டிஜெகதீசன், மாவட்ட பொருளாளர் கே.நாராயணன், ஓசூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் பி.ஆர்.வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story