கேரளாவுக்கு கடத்த புதரில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த புதரில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 27 July 2018 4:15 AM IST (Updated: 26 July 2018 8:41 PM IST)
t-max-icont-min-icon

குளச்சல் பகுதியில் கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக புதரில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ ரே‌ஷன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

குளச்சல்,

குமரி மாவட்டத்தில் ரே‌ஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி, மானிய விலையில் வினியோகம் செய்யப்படும் மண்எண்ணெய் ஆகியவற்றை சிலர் மலிவு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதை தடுக்க வருவாய்துறை அதிகாரிகள் ரோந்து சென்றும், வாகன சோதனை நடத்தியும் கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். ஆனாலும், கடத்தல்காரர்கள் பொருட்களை சாலையோரம் பதுக்கி வைத்து, நூதன முறையில் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில், மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் ராஜசேகர் தலைமையில் துணை தாசில்தார் முருகன் மற்றும் அதிகாரிகள் குளச்சலை அடுத்த கொட்டில்பாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கொட்டில்பாடு ரே‌ஷன் கடையின் அருகே புதர்களுக்கு இடையே சந்தேகத்திற்கு இடமாக சாக்கு மூடைகள் தெரிந்தன. அந்த மூட்டைகளை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அதில் 400 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Next Story