உத்திரமேரூரில் ஊராட்சி செயலாளர் குத்திக்கொலை தம்பி கைது
உத்திரமேரூரில் ஊராட்சி செயலாளரை குத்தி கொன்ற வழக்கில் அவரது தம்பியை போலீசார் கைது செய்தனர்.
உத்திரமேரூர்,
உத்திரமேரூர் ஒன்றியம் மருத்துவம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன்கள் வெங்கடேசன் (வயது 45), ஏழுமலை (41). இவர்களில் வெங்கடேசன் அரசாணிமங்கலம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்குள் சொத்து பாகப்பிரிவினையில் ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெங்கடேசன் வீட்டில் இருந்து கழிவுநீர் ஏழுமலை வீட்டுப்பக்கம் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசனை அக்கம்பக்கத்தினர் உடனடியாக உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து உத்திரமேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் உடனடியாக வந்து வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங் கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இறந்த வெங்கடேசனுக்கு அமுதா என்ற மனைவியும், யுவஸ்ரீ (12) என்ற மகளும் பிரவீன் (9) என்ற மகனும் உள்ளனர்.
இந்த கொலை வழக்கில் செங்கல்பட்டு அருகே பதுங்கி இருந்த ஏழுமலையை போலீசார் கைது செய்தனர்.

நேற்று காலை கழிவுநீர் சம்பந்தமாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. வாய்தகராறு அதிகமாகி கோபம் அடைந்த ஏழுமலை தனது வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து அண்ணன் வெங்கடேசனின் வயிற்றில் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசனை அக்கம்பக்கத்தினர் உடனடியாக உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து உத்திரமேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் உடனடியாக வந்து வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங் கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இறந்த வெங்கடேசனுக்கு அமுதா என்ற மனைவியும், யுவஸ்ரீ (12) என்ற மகளும் பிரவீன் (9) என்ற மகனும் உள்ளனர்.
இந்த கொலை வழக்கில் செங்கல்பட்டு அருகே பதுங்கி இருந்த ஏழுமலையை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story