ஓட்டுப் போடாதவர்களை முதல்-மந்திரி புறக்கணிக்க கூடாது - தினேஷ் குண்டுராவ் பேட்டி
பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெங்களூரு,
மாநில மக்கள் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும் என்றும், ஓட்டுப் போடாதவர்களை முதல்-மந்திரி புறக்கணிக்க கூடாது என்றும் காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
வடகர்நாடக மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என்று குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல. வடகர்நாடக மாவட்டங்களை தனிமாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சில அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த முழு அடைப்பு போராட்டம் தேவையற்றது. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வடகர்நாடக மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அந்த மாவட்டங்களுக்கு அநியாயம் ஏற்பட்டு இருப்பதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. வடகர்நாடகத்தை காங்கிரஸ் புறக்கணிக்கவில்லை.
பட்ஜெட்டில் எல்லா மாவட்டங்களுக்கும் சமமான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. மந்திரிசபையில் காங்கிரஸ் சார்பில் 6 இடங்கள் காலியாக உள்ளது. அடுத்த மாதம் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மந்திரிசபை விரிவாக்கத்தின் போது வடகர்நாடகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்த மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு கூடுதலாக மந்திரி பதவி வழங்கப்படும். அந்த மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும்.
முதல்-மந்திரி குமாரசாமி தனக்கு ஓட்டுப் போடாதவர்களுக்கு தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி இருப்பது தவறானது. முதல்-மந்திரி என்பவர் தனக்கு ஓட்டுப்போட்டவர்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல. முதல்-மந்திரி பதவிக்கு வந்த பின்பு, 224 தொகுதிகளை சேர்ந்த மக்களுக்காகவும் பணியாற்ற வேண்டும்.
மாநில மக்கள் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டியது அவசியமானதாகும். தனது கட்சிக்கு ஓட்டுப் போடாதவர்களை முதல்-மந்திரி புறக்கணிக்க கூடாது. நாடாளுமன்ற தேர்தல் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளுக்கு முக்கியமானதாகும். அதனால் 2 கட்சிகளும் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story