தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி தொடர எங்களுக்கு ஆதரவு தாருங்கள், டி.டி.வி.தினகரன் பேச்சு
தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர்ந்து செயல்பட எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று பரமக்குடியில் டி.டி.வி.தினகரன் பேசினார்.
பரமக்குடி,
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 3–வது ஆண்டு நினைவு நாளையொட்டி ராமேசுவரத்தில் அவருடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் வந்திருந்தார். அவருக்கு பரமக்குடி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஏற்பாட்டில் பார்த்திபனூர் நான்கு வழிச்சாலையில் மேளதாளங்கள் முழங்க ஆளுயர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு டி.டி.வி.தினகரன் கழக அமைப்பு செயலாளர் சோமாத்தூர் சுப்பிரமணியன் வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் கழக கொடியேற்றினார்.
அப்போது ஏராளமான பெண்கள் ரோஜா பூக்களை தூவி அவரை வரவேற்றனர். பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சோமாத்தூர் சுப்பிரமணியன் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினருடன் உரையாடினார். அதன் பிறகு வேனில் புறப்பட்டு பரமக்குடி வந்த அவருக்கு ஐந்துமுனை பகுதியில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவரும், திருசாய் நிறுவனங்களின் தலைவருமான மணல் சந்திரசேகர் ஆளுயர மாலை அணிவித்து செங்கோல் நினைவு பரிசு வழங்கினார்.
அதைத்தொடர்ந்து கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் பரமக்குடி நகர் கழகம் சார்பில் நகர் செயலாளர் வேந்தை சுப்பிரமணியன் தலைமையில் மேளதாளங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது என்ஜினீயர் செந்தில்–ரம்யா தம்பதியினரின் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கூறினார். அந்த குழந்தைக்கு விஜய் என்று பெயர் சூட்டினார். அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் டி.டி.வி.தினகரன் பேசும்போது, தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர்ந்து செயல்பட வேண்டும். ஜெயலலிதாவின் கட்சியும், ஆட்சியும் நம்மோடு இருக்க வேண்டும் என்பதற்காக நம்மோடு தோளோடு தோளாக நிற்கின்ற டாக்டர் முத்தையாவுக்கு நீங்கள் என்றும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
போகலூர் ஒன்றிய கழகம் சார்பில் சத்திரக்குடியில் ஒன்றிய செயலாளர் ராஜாராம் பாண்டியன் தலைமையில் மலர் தூவி பட்டாசுகள் வெடித்து வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கை கொடுத்தார். அதேபோல நயினார்கோவில் ஒன்றிய கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு பூரண கும்ப மரியாதையுடன் டி.டி.வி.தினகரனுக்கு வரவேற்பு அளித்தனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பரமக்குடி ஒன்றியம் சார்பில் அவை தலைவர் கஜேந்திர பாண்டியன், துணை செயலாளர் ஆறுமுகக்கனி, பார்த்திபனூர் நகர் செயலாளர் ராமநாதன், சிறுபான்மை பிரிவு செயலாளர் அயூப்கான், ஒன்றிய இணை செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் இந்திரன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் வைரசுந்தரம், மாணவரணி செயலாளர் விசுவநாதன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் நாகராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் மாரிச்செல்வம், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் துரைப்பாண்டி, மீனவரணி செயலாளர் வாசுதேவன், இளைஞர் பாசறை பொருளாளர் பாலமுருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் விக்னேஷ்குமார், இணை செயலாளர் முத்துமணிகண்டன், இளைஞர் பாசறை செயலாளர் சதீஷ்குமார், ஐ.டி.பிரிவு துணை செயலாளர் பாண்டித்துரை, ஒன்றிய தலைவர் அருண்குமார், மகளிரணி செயலாளர் ரேணுகா சசிக்குமார், சிவகிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நயினார்கோவில் ஒன்றியம் சார்பில் அவை தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பேரவை இணை செயலாளர் முத்துப்பாண்டி, இளைஞரணி செயலாளர் சாமித்துரை, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நாகராஜ், மாவட்ட பிரதிநிதி ராமன், ஒன்றிய துணை செயலாளர் நாகராஜன், பொருளாளர் கோட்டைச்சாமி, இணை செயலாளர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி பூசத்துரை, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெயகணேசன், விவசாய அணி செயலாளர் கார்மேகம், மீனவரணி செயலாளர் பாண்டித்துரை, சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் செய்யது அபுதாகீர், மாணவரணி செயலாளர் கார்த்திகைசாமி, இளைஞர் பாசறை செயலாளர் கணேஷ், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாள் தினேஷ்குமார், வல்லம் ஊராட்சி செயலாளர் கேசவன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சபரி, இளைஞர் பாசறை ரஞ்சித், ஐ.டி.பிரிவு செயலாளர் கரிகாலன் உள்பட 100 வாகனங்களில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போகலூர் ஒன்றிய கழகம் சார்பில் துணை செயலாளர் வீரகணபதி, பொருளாளர் ராமச்சந்திரன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சரவணக்குமார், மாவட்ட இணை செயலாளர் ராஜசெல்வி குருந்தையா, ஜெயலலிதா பேரவை செயலாளர் ராமமூர்த்தி, எம்.ஜி.ஆர. இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாலசுப்பிரமணியன், மகளிரணி செயலாளர் பிரபாவதி, விவசாய அணி செயலாளர் நவாஸ்கான், ஐ.டி. பிரிவு செயலாளர் தென்னரசு, முத்துவயல் பாஸ்கரன், மாணவரணி செயலாளர் கார்த்திக் சேதுபதி, கவிதைகுடி ஊராட்சி செயலாளர் பாரதிராஜா, மாவட்ட பிரதிநிதி பழனிச்சாமி, இலக்கிய அணி செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பரமக்குடி நகர் கழகம் சார்பில் அவை தலைவர் சீனி முகமது, நெசவாளர் அணி மணிகண்டன், எம்.ஜி.ஆர். மன்றம் சத்தியமூர்த்தி, நாகராஜன், லண்டன் முனியாண்டி, மருதயா, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி முருகேசன், அமைப்பு சாரா உறுப்பினர் லண்டன் முருகன், மாவட்ட வக்கீல் பிரிவு ஜோதிபாசு, உத்திரகுமார், நகர் இணை செயலாளர் போஸ், ஜெயலலிதா பேரவை கலைவாணன், சிறுபான்மை பிரிவு மீரா முகைதீன், இளைஞரணி முத்துக்குமார், இளைஞர் பாசறை செயலாளர் சரவணன், ஐ.டி.பிரிவு செயலாளர் ராஜ்குமார், வர்த்தக அணி மாரீசுவரன், மாணவரணி கார்டன் சரவணன், இளைஞர் பாசறை வெங்கடேசன், மீனவரணி ராஜா, பரமக்குடி நகர் துணை செயலாளர் சேவியர் எழிலன், பரமக்குடி ஒன்றியம் வலையனேந்தல் கருப்பையா, வக்கீல் பிரிவு நாகராஜன், மாவட்ட வக்கீல் பிரிவு பொருளாளர் திருச்செல்வம், இணை செயலாளர் ஜோதிபாசு உள்பட பலர் ஏராளமான வாகனங்களில் சென்றனர்.
டி.டி.வி.தினகரனுடன் அவரது வேனில் மாநில மருத்துவரணி செயலாளர் டாக்டர் முத்தையா, மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த், கழக அமைப்பு செயலாளர் வ.து.நடராஜன் ஆகியோர் வந்தனர். பார்த்திபனூரில் இருந்து போகலூர் ஒன்றியம் எல்லை முடிவு வரை வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் அலங்கார மின் வளைவுகள், கட்–அவுட்டுகள், பிளக்ஸ் பேனர்கள், வரவேற்பு தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.