லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி: குமரி மாவட்டத்தில் காய்கறிகள் விலை உயர்வு
லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலியாக குமரி மாவட்டத்தில் காய்கறிகள் விலை உயர்ந்து இருக்கிறது. சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கிலோ ரூ.80-க்கு விற்பனையாகிறது.
நாகர்கோவில்,
அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இந்த வேலை நிறுத்தத்துக்கு குமரி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் குமரி மாவட்டத்தில் லாரிகள் ஓடவில்லை. இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று 8-வது நாளாக தொடர்ந்தது.
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக குமரி மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் தேங்காய், ரப்பர் ஷீட்கள், ரப்பர் பால், ரப்பர் மர தடிகள், தும்பு, உப்பு போன்ற பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. லாரி புக்கிங் ஏஜெண்டுகளும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் புக்கிங் அலுவலகத்தில் சரக்குகளுக்கான புக்கிங் எதுவும் நடைபெறவில்லை.
மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் பழ வகைகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வருவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவற்றின் விலை உயர்வடைந்து இருக்கிறது.
மேலும் பல்வேறு சந்தைகளில் காய்கறிகள் விலை அதிரடியாக உயர்ந்திருக்கிறது. குமரி மாவட்டத்தில் மொத்த வியாபாரம் நடைபெறக்கூடிய சந்தைகளில் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள அப்டா மார்க்கெட் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கிருந்து குமரி மாவட்டத்தில் தக்கலை, திங்கள்சந்தை, கருங்கல் மற்றும் மார்த்தாண்டம் உள்ளிட்ட இடங்களுக்கும், கேரளாவுக்கும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அப்டா மார்க்கெட்டுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் தினமும் சுமார் 30 லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. ஆனால் தற்போது பெரும்பாலான லாரிகள் இங்கு வராததால், காய்கறிகள் விலை அதிகரித்து உள்ளன. வடசேரி சந்தையிலும் காய்கறி விலை உயர்ந்து இருந்தது.
அதாவது ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ பல்லாரி நேற்று ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல ரூ.40-க்கு விற்பனையான பச்சை மிளகாய் ரூ.80-க்கும், ரூ.40 முதல் ரூ.45 வரை விலை போன கேரட் ரூ.70-க்கும் விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் விலையும் ரூ.50-ல் இருந்து ரூ.80 ஆக உயர்ந்திருக்கிறது. இதுபோன்று வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகளில் எடுத்து வரப்படும் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்தது.

Related Tags :
Next Story