ராசிபுரத்தில் லாட்டரி விற்பனையை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராசிபுரம்,
ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி அமைப்பாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் கோபி கிருஷ்ணன், குமாரசாமி, பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஏழுமலை, தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் மணிகண்டன் வரவேற்று பேசினார். அதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் முருகேசன் ஆகியோர் பேசினர். பின்னர் ராசிபுரத்தில் லாட்டரி சீட்டு விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட துணைத்தலைவர் ரஞ்சித்குமார், மாவட்ட செயலாளர் ஹரிஹரன், தொழிலாளர் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் சேதுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொதுச்செயலாளர் குமார் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story