300 தனியார் மருத்துவமனைகள் அடைப்பு - டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் பரிதவிப்பு
டாக்டர்கள் வேலை நிறுத்தம் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் 300 தனியார் மருத்துவமனைகள் நேற்று அடைக்கப்பட்டன. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பரிதவித்தனர்.
தேனி,
மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணைய சட்டம் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் முழுவதும் தனியார் டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்தனர்.
இதன் காரணமாக நேற்று தனியார் மருத்துவமனைகளின் வெளிப்புற கதவு பூட்டப்பட்டு இருந்தது. உள்நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டது. வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. தனியார் மருத்துவமனைகள் அடைக்கப்பட்டதால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதியது. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கம்பம் அரசு மருத்துவமனை, போடி அரசு மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. கிராமப்புற பகுதிகளிலும் தனியார் மருத்துவமனைகள் செயல்படாததால் பொதுமக்கள் நீண்ட தூரம் பயணித்து அரசு மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து இந்திய மருத்துவ கழகத்தின் கம்பம் பள்ளத்தாக்கு கிளையின் செயலாளர் டாக்டர் தியாகராஜன் கூறியதாவது:-
இந்த சட்டம் என்பது ஜனநாயக மரபுக்கு எதிரானது. இதில் 25 உறுப்பினர்களில் 5 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள். மற்றவர்கள் நியமனம் பெற்றவர்கள். மாநில உரிமைகளுக்கு எதிரானது. எல்லா மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் இல்லை. தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக் கீடு 15 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயரும். இதனால், ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இதை எதிர்த்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. புற நோயாளிகள் சிகிச்சை மற்றும் தீர்மானிக்கப்பட்ட அவசரமில்லாத அறுவை சிகிச்சை புறக்கணிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் 300 மருத்துவமனைகள் அடைக்கப்பட்டன. 850 டாக்டர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story