சின்னமனூர் அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட தோட்டத்தில் அதிகாரிகள் ஆய்வு
கழிவுகளை கேரள மாநிலத்துக்கே திருப்பி அனுப்பக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி,
சின்னமனூர் அருகே தனியார் தோட்டத்தில் கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவ கழிவுகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அந்த கழிவுகளை கேரள மாநிலத்துக்கே திருப்பி அனுப்பக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சின்னமனூர் அருகே குச்சனூரில் இருந்து சங்கராபுரம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசுவதாக நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவுக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கும் விவசாயிகள் சிலர் தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலீசாரும், வருவாய்த்துறை அலுவலர்களும் நேற்று முன்தினம் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தில் மருத்துவ கழிவுகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இந்தநிலையில் நேற்று காலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சம்பவ இடத்துக்கு வந்து மருத்துவ கழிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மலைபோல் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. அவை அனைத்தும் மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படும் மருந்து, மாத்திரைகள், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்திய பொருட்கள், ரத்தம் படிந்த துணிகள் போன்றவை குவிந்து கிடந்தன. சுமார் 50 டன் மருத்துவக் கழிவுகள் மலைபோல் குவிந்து கிடந்தன.
சம்பவ இடத்துக்கு உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. சென்னியப்பன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகளும், மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களும் வந்தனர். அவர்களும் குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகளை பார்வையிட்டனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘இவை கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொட்டப்பட்டுள்ள இடம் ஒரு அறக்கட்டளைக்கு சொந்தமானது என்று தெரியவருகிறது. அந்த அறக்கட்டளை பாத்தியப்பட்ட மருத்துவமனை கேரள மாநிலத்தில் செயல்படுகிறது. அங்கிருந்து இவை கொண்டு வந்து கொட்டப்பட்டு இருக்கலாம். மேலும், அங்குள்ள மருத்துவமனைகளில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு உரிமம் பெற்று அவற்றையும் இங்கு கொண்டு வந்து குவித்து வைத்து இருப்பதாக தெரியவருகிறது. இதற்கு முறையான அனுமதி பெற்றுள்ளார்களா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் மூலமாக இதுகுறித்து போலீசில் புகார் செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் இதுகுறித்து கூறுகையில், ‘மருத்துவ கழிவுகளை இப்படி கொட்டி வைப்பது என்பது ஆபத்தானது. எப்படி இங்கு கொண்டு வரப்பட்டது என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யவும், சட்டப்படியான மேல் நடவடிக்கையும் எடுக்கப்படும்’ என்றார்.
இந்நிலையில், மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தேனி மண்டல செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் வந்தனர். அவர்கள் மருத்துவ கழிவுகளை பார்வையிட்டனர். பின்னர், அப்பகுதியில் அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், போலீஸ் சோதனை சாவடி, வனத்துறை சோதனை சாவடிகளை கடந்தே இந்த மருத்துவ கழிவுகள் தேனி மாவட்டத்துக்கு வந்துள்ளதால் சோதனை சாவடிகளில் பணியாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தேனி மாவட்ட மண்வளம், நீர்வளம் பாதிக்கப்படுவதை தடுக்க இந்த மருத்துவ கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர். அந்த புகாரில் இந்த சம்பவம் தொடர்பாக சோதனை சாவடிகளில் பணியாற்றும் போலீசார், வனத்துறை ஊழியர்கள், சம்பந்தப்பட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதற்கிடையே தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில துணை செயலாளர் செங்குட்டுவன் தலைமையில் விவசாயிகள் சிலர் சம்பவ இடத்துக்கு வந்து மருத்துவ கழிவுகளை பார்வையிட்டனர். அவர்களும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
உடலில் அரிப்பு
மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களில் ஆய்வு செய்த அதிகாரிகள் முதல் வேடிக்கை பார்க்க வந்த மக்கள் வரை பலருக்கும் அங்கு நின்று கொண்டு இருந்த சில நிமிடங்களில் உடலில் ஒருவித அரிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கொஞ்சம் நேரம் நிற்பதற்குள் உடலில் அரிப்பு ஏற்படுகிறது. இவற்றில் நோய்க் கிருமிகள் இருக்க வாய்ப்பு உள்ளது. காற்றில் இவை பரவினால் அருகில் உள்ள தோட்டங்களில் வேலை பார்க்கும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. உடனடியாக இவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
அரைகுறையாக ஆய்வு செய்த அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்
மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு விவசாயிகள் சிலர் நின்று கொண்டு இருந்தனர். ஆய்வுக்கு வந்த அதிகாரிகள், மலைபோல் குவிந்துள்ள குப்பையின் ஒரு பகுதியை மட்டும் பார்வையிட்டு விட்டு, சுமார் 3 கிலோ அளவுக்கு மருத்துவ கழிவுகள் கிடப்பதாகவும், மற்றவை பாலித்தீன் குப்பைகள் என்றும் தெரிவித்தனர். இதை கேட்ட விவசாயிகள் அதிகாரிகள் அரைகுறையாக ஆய்வு நடத்தக்கூடாது, முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று கண்டித்து வாக்குவாதம் செய்தனர். பின்னர் அதிகாரிகள் மற்றொரு பகுதியில் சென்று பார்த்த போது அங்கு டன் கணக்கில் மருத்துவ கழிவுகள் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

Related Tags :
Next Story