கவுரி லங்கேசை கொலை செய்ய போலீஸ் அதிகாரியின் வீட்டில் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு (2017) செப்டம்பர் மாதம் 5-ந் தேதி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு,
அதாவது, கவுரி லங்கேசை கொல்வதற்கான சதித்திட்டம் போலீஸ் அதிகாரி ஒருவரின் வீட்டில் வைத்து தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சதித்திட்டமானது மாகடி ரோடு கடபனகெரே பகுதியில் உள்ள வீட்டில் வைத்து வகுக்கப்பட்டு உள்ளது.
இந்த வீட்டை கைதாகி உள்ள சுரேஷ் வாடகைக்கு எடுத்து இருந்ததும், வீட்டில் அமோல் காலே உள்ளிட்ட சிலர் தங்கி கவுரி லங்கேசை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.
கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக நவீன் குமார், சுஜீத் குமார் என்ற பிரவீன், அமோல் காலே, பிரதீப், மனோகர், பரசுராம் வாக்மோர், சுள்ளியா அருகே உள்ள சாம்பாஜி கிராமத்தை சேர்ந்த மோகன் நாயக், உப்பள்ளியை சேர்ந்த அமித் ராமசந்திரா, கணேஷ் மிஸ்கின், மடிகேரி அருகே உள்ள பாலூரை சேர்ந்த ராஜேஷ் பங்கேரா, துமகூரு மாவட்டம் குனிகலை சேர்ந்த சுரேஷ் ஆகிய 11 பேரை சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்துள்ளனர்.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த வழக்கு தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது, கவுரி லங்கேசை கொல்வதற்கான சதித்திட்டம் போலீஸ் அதிகாரி ஒருவரின் வீட்டில் வைத்து தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சதித்திட்டமானது மாகடி ரோடு கடபனகெரே பகுதியில் உள்ள வீட்டில் வைத்து வகுக்கப்பட்டு உள்ளது.
இந்த வீட்டை கைதாகி உள்ள சுரேஷ் வாடகைக்கு எடுத்து இருந்ததும், வீட்டில் அமோல் காலே உள்ளிட்ட சிலர் தங்கி கவுரி லங்கேசை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, வீட்டு உரிமையாளராக இருக்கும் போலீஸ் அதிகாரியிடம் விசாரித்தபோது, அந்த வீடு தனது உறவினரின் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவர் தான் வாடகைக்கு கொடுத்ததாகவும், இந்த விஷயத்தில் அவருக்கு சம்பந்தம் இல்லை என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story