பட்டப்பகலில் துணிகரம்: வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 55 பவுன் நகை-பணம் திருட்டு
கீரமங்கலத்தில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 55 பவுன் நகை, பணத்தை பட்டப்பகலில் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தை சேர்ந்தவர் காளைச்சாமி. இவர் காந்திஜி சாலையில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்தில் அவருக்கு துணையாக அவரது மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் காளைச்சாமி குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுவிட்டு, பின்னர் கடைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, வீட்டின் படுக்கை அறையில் இருந்த 2 இரும்பு பீரோக்களை உடைத்து அதற்குள் இருந்த 55 பவுன் தங்க நகைகள், ரூ.25 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் துணிமணிகளும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதனால் காளைச்சாமியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில், மர்மநபர்கள் வீட்டின் முன் பக்கமாக வராமல் பக்கவாட்டில் உள்ள முள் வேலியை தாண்டி சுற்றுச்சுவர் மறைவில் இருந்து பின் பக்க கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். மேலும் காளைச்சாமி வீட்டில் இருந்த நாயை நேற்று முன்தினம் மதியம் முதல் காணவில்லை. மேலும் அப்பகுதியில் உள்ள சில இடங்களில் நாய் வாந்தி எடுத்திருந்த எச்சங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே மர்மநபர்கள் பல நாட்களாக காளைச்சாமியின் வீட்டை நோட்டம் பார்த்துவிட்டு முதல் நாளே விஷம் கொடுத்து நாயை கொன்றுவிட்டு, ஆள் இல்லாத நேரத்தில் நகை, பணத்தை திருடி சென்று இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story