ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி போதகர் கைது
அருமனை அருகே ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த போதகரை போலீசார் கைது செய்தனர்.
அருமனை,
அருமனை அருகே குழிவிளாகம் மாவகோடு பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி சுதாராணி (வயது 40). இவர்களுக்கு ஒரு மகளும், பினு (20) என்ற மகனும் உள்ளனர். பினு என்ஜினீயரிங் படித்துள்ளார்.
சிறக்கரை மாலைக்கோடு பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தை இடைக்கோடு பகுதியை சேர்ந்த போதகர் சத்திய நாதன் (55) என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆலயத்தில் சுதாராணி உறுப்பினராக உள்ளார். சுதாராணி தனது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக சொத்துகளை விற்று வங்கியில் லட்சக்கணக்கில் பணம் போட்டு வைத்திருந்தார்.
இதை தெரிந்து கொண்ட போதகர் சத்தியநாதன், அந்த பணத்தை அபகரிக்க திட்டமிட்டார். இதனையடுத்து சுதாராணியை சந்தித்து, பினுவிற்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தர ஏற்பாடு செய்கிறேன். அதற்கு லட்சக்கணக்கில் பணம் தர வேண்டும் என்று சத்தியநாதன் ஆசைவார்த்தைகள் கூறினார்.
இதனை நம்பிய சுதாராணி 2 கட்டமாக ரூ.13 லட்சத்தை சத்தியநாதனிடம் வழங்கியுள்ளார். ஒரு ஆண்டாகியும் பினுவிற்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் சத்தியநாதனிடம் பணத்தை திருப்பி தருமாறு சுதாராணி கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தையும் திருப்பி தரவில்லை. இதற்கிடையே சத்தியநாதன் பலரிடம் வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்த விவரம் சுதாராணிக்கு தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த மோசடி குறித்து அவர் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து சத்திய நாதனை கைது செய்தார்.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், போதகர் சத்தியநாதன் மேலும் சிலரிடம் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் விசாரணை தொடர்ந்து நடக்கிறது.

Related Tags :
Next Story