போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் வாங்கி ரூ.4½ கோடி மோசடி


போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் வாங்கி ரூ.4½ கோடி மோசடி
x
தினத்தந்தி 30 July 2018 5:52 AM IST (Updated: 30 July 2018 5:52 AM IST)
t-max-icont-min-icon

மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் மனோஜ் பாண்டே. இவர் மும்பையில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.4½ கோடி கடன் வாங்கி இருந்தார்.

மும்பை,

தொழில் அதிபர் மனோஜ் பாண்டே  வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் தலைமறைவானார்.

இதையடுத்து வங்கி அதிகாரிகள் தொழில் அதிபர் கடன் பெற கொடுத்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது அது போலியானது என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள் மோசடி குறித்து போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி ஆவணங்கள் மூலம் ரூ.4½ கோடி கடன் வாங்கிய தொழில் அதிபர் மனோஜ் பாண்டே மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ரிஸ்வான் கான் என்பவரையும் கைது செய்தனர். 

Next Story