ஈரோட்டில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஈரோட்டில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 July 2018 3:45 AM IST (Updated: 31 July 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்சண ரெயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் ஈரோடு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு,

ரெயில்வே துறையில் ஓய்வுபெற்ற ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தாமல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். ரெயில்வே துறையை தனியார் மயமாக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்சண ரெயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் ஈரோடு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்துக்கு சங்க கோட்ட தலைவர் கே.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ரெயில்வே ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story