பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆய்வு


பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆய்வு
x
தினத்தந்தி 31 July 2018 10:00 PM GMT (Updated: 31 July 2018 6:01 PM GMT)

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி நேற்று ஆய்வு செய்தார்.

நெல்லை,

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி நேற்று ஆய்வு செய்தார்.

அமைச்சர் ஆய்வு

தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி நேற்று நெல்லை வந்தார். அவர், பாளைங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கை ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள செயற்கை புல் மைதானம், நீச்சல் குளம், தடகள பயிற்சி ஓடுதளம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:–

மறைந்த முதல்– அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. விளையாட்டு துறையை பொறுத்த வரையில் தற்காலிக பணியிடங்களில் ஏராளமானவர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறார்கள். அவர்களை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., விளையாட்டு அலுவலர் வீரபத்திரன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story