கருணாநிதி உடல் நலக்குறைவு: தி.மு.க. தொண்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை


கருணாநிதி உடல் நலக்குறைவு: தி.மு.க. தொண்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 31 July 2018 9:30 PM GMT (Updated: 31 July 2018 6:33 PM GMT)

கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் மனமுடைந்த தி.மு.க. தொண்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

எட்டயபுரம்,

கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் மனமுடைந்த தி.மு.க. தொண்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வார்டு உறுப்பினர்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் கான்சாபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 43), கூலி தொழிலாளி. இவர் எட்டயபுரம் 13–வது வார்டில் தி.மு.க. கட்சி உறுப்பினராக இருந்தார்.

தற்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மனவேதனை அடைந்த செல்வகுமார் கடந்த 2 நாட்களாக சாப்பிடாமல் இருந்து வந்தார்.

தற்கொலை

நேற்று முன்தினம் மாலையில் அவர் தனது வீட்டுக்கு அருகே உள்ள தோட்டத்தில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிர் இழந்தார்.

இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட செல்வகுமாருக்கு அருணாசலவடிவு என்ற மனைவியும், அழகுராஜா என்ற மகனும், அன்னலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

இதற்கிடையே, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. நேற்று காலையில் செல்வகுமாரின் குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.


Next Story