மண்டபம் அருகே பெண்ணுக்கு வாட்ஸ்–அப் மூலம் தொல்லை; பட்டதாரி வாலிபர் கைது


மண்டபம் அருகே பெண்ணுக்கு வாட்ஸ்–அப் மூலம் தொல்லை; பட்டதாரி வாலிபர் கைது
x
தினத்தந்தி 31 July 2018 9:45 PM GMT (Updated: 31 July 2018 8:29 PM GMT)

ராமநாதபுரம் அருகே பெண்ணுக்கு வாட்ஸ்–அப் மூலம் தொல்லை கொடுத்த பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் அருகே மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாமரைஊருணியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். பட்டதாரி வாலிபர். இவரது உறவினர் பெண் ஒருவரின் செல்போன் பழுதடைந்து விட்டதாம். இதனால் அந்தப் பெண் தினேஷ்குமாரிடம் கொடுத்து செல்போனை பழுதுபார்த்து தருமாறு கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரும் செல்போனை பழுது பார்த்து கொடுத்துள்ளார். ஆனால் அவர் அந்த செல்போனில் ஒரு செயலியை உருவாக்கிக் கொடுத்துள்ளார். அதாவது அந்தப் பெண் யாருக்கு வாட்ஸ்–அப்பில் படங்கள் அனுப்பினாலும், யாரிடம் வாட்ஸ்–அப்பில் பேசினாலும் அந்த விவரம் தினேஷ்குமாரின் செல்போனிலும் பதிவாகி விடுமாம்.

ஒரு கட்டத்தில் இந்த வி‌ஷயம் அந்தப்பெண்ணுக்கு தெரிந்து தினேஷ்குமாரை கண்டித்துள்ளார். ஆனாலும் மீண்டும் அந்தப்பெண்ணுக்கு வாட்ஸ்–அப் மூலம் தொல்லை கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப்பெண் தேவிப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரேம்சந்த் வழக்குப்பதிவு செய்து தினேஷை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.


Next Story