குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 31 July 2018 10:00 PM GMT (Updated: 2018-08-01T02:00:19+05:30)

முதுகுளத்தூர் தாலுகா நல்லூர் கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் தாலுகா நல்லூர் கிராமத்தில் காவிரி குடிநீர் குழாய் உடைந்துள்ளதால் கடந்த சில மாதங்களாக அங்கு குடிநீர் சப்ளை இல்லை. பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாதால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த முதுகுளத்தூர் தாசில்தார் மீனாட்சி சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தியதோடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை அழைத்து உடனடியாக உடைந்த குழாயை சீரமைத்து, முறையாக குடிநீர் வழங்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.

--–

படம் உண்டு


Next Story