காஞ்சீபுரத்தில் தலைமறைவான ரவுடி கைது


காஞ்சீபுரத்தில் தலைமறைவான ரவுடி கைது
x
தினத்தந்தி 31 July 2018 11:45 PM GMT (Updated: 31 July 2018 10:45 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கஜாவை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, காஞ்சீபுரம் உட்கோட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகளை பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், தலைமறைவான ரவுடிகளை பிடிக்க சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கொலை, கொலை முயற்சி, திருட்டு, கொள்ளை, அடிதடி வழக்குகள் என மொத்தம் 14 வழக்குகளில் சம்பந்தப்பட்ட தலைமறைவான ரவுடி காஞ்சீபுரம் பொய்யாகுளம், ஐதர்பேட்டை தெருவை சேர்ந்த கஜா (வயது 28) என்பவரை சின்ன காஞ்சீபுரம் போலீசார் கைது செய்தனர்.

மேலும் மாவட்டத்தில் தலைமறைவான ரவுடிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி தெரிவித்தார். கைது செய்யப்பட்ட ரவுடி கஜா மீது காஞ்சீபுரம் கோர்ட்டில் பிடிவாரண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story