‘அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்’ முன்னாள் மந்திரி காகோடு திம்மப்பா அறிவிப்பு


‘அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்’ முன்னாள் மந்திரி காகோடு திம்மப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 31 July 2018 11:00 PM GMT (Updated: 2018-08-01T04:25:31+05:30)

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் மந்திரி காகோடு திம்மப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் மந்திரி காகோடு திம்மப்பா அறிவித்துள்ளார்.

அரசியலில் இருந்து ஓய்வு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் காகோடு திம்மப்பா. இவர் சித்தராமையா ஆட்சியில் சபாநாயகராக பணியாற்றினார். சிறிது காலத்திற்கு பிறகு மந்திரியாக நியமிக்கப்பட்டார். வருவாய்த்துறை மந்திரியாக பணியாற்றினார். அவர் 85 வயதை தாண்டிவிட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்த நிலையில் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

எனக்கு வயதாகிவிட்டது. இனிமேல் போராட்டம் நடத்த எனக்கு பலம் இல்லை. இத்தனை ஆண்டுகள் காலம் மக்களுக்கு ஆதரவாக போராடினேன். அதனால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன். அகண்ட கர்நாடகத்தை பிளவுபடுத்த யாரும் முயற்சி செய்யக்கூடாது. தனி மாநிலம் கோருவது சரியல்ல.

நீண்ட காலம் போராடினர்

அகண்ட கர்நாடகத்திற்காக நமது மாநில தலைவர்கள் நீண்ட காலம் போராடினர். இது அகண்ட கர்நாடகமாகவே இருக்க வேண்டும். மந்திரி பதவி கிடைக்கவில்லை என்பதற்காக மாநிலத்தை பிளவுபடுத்துவது பற்றி பேசுவது சரியல்ல. ஒரு சில பிரச்சினைகளை வைத்துக்கொண்டு, மாநிலத்தை பிளவுபடுத்துவதாக பேசக்கூடாது.

இவ்வவாறு காகோடு திம்மப்பா கூறினார்.


Next Story