அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் செல்ல தடை


அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் செல்ல தடை
x
தினத்தந்தி 2 Aug 2018 3:15 AM IST (Updated: 2 Aug 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் இருந்து சாலக்குடிக்கு செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலாபயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதில் வால்பாறையை அடுத்த சாலக்குடிக்கு செல்லும் வழியில் உள்ள வனப்பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளம் காரணமாக சாலக்குடிக்கு செல்லும் வழியில் உள்ள சார்ப்பா நீர்வீழ்ச்சியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த நீர்வீழ்ச்சி பகுதியில் அமைந்துள்ள பழையபாலம் உடைந்து சேதமடைந்தது. அருகில் உள்ள புதிய பாலத்திலும் வெள்ளம் தொட்டப்படி செல்கிறது.

இந்த நிலையில் பாதுகாப்பு நலன்கருதி வால்பாறையில் இருந்து சாலக்குடிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் வால்பாறை வழியாக கேரளாவிற்கு செல்லும் சுற்றுலாபயணிகளும், கேரளமாநிலம் வழியாக வால்பாறைக்கு வருகின்ற சுற்றுலாபயணிகளும் வரமுடியாமல் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும் காட்டாற்று வெள்ளம் சார்ப்பா நீர்வீழ்ச்சி வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்வதால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. எனவே கேரளமாநில அதிரப்பள்ளி வனத்துறையினரும், போலீசாரும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாபயணிகள் செல்லதடைவிதித்தனர்.


Next Story