அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரத்தடியில் படிக்கும் அவலம் கட்டிடம் கட்டித்தர பெற்றோர் கோரிக்கை
திருமருகல் அருகே அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் மரத்தடியில் படிக்கும் அவலநிலை உள்ளதால் கட்டிடம் கட்டித்தரவேண்டும் என்று பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமருகல்,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை மொத்தம் 167 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள பழைய கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதையடுத்து சேதமடைந்த கட்டிடத்தை அரசு இடித்துவிட்டு 3 மற்றும் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்திற்கு சென்று படிக்க ஏற்பாடு செய்தனர். 1,2 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் கட்டிடம் இடிக்கப்பட்ட இடத்தில் மரத்தடியில் படித்து வருகின்றனர். இந்தநிலையில் மாணவர்களின் பெற்றோர் இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனாலும் கட்டிடம் கட்டப்படாததால் மாணவ, மாணவிகள் மரத்தடியில் படிக்கும் அவலநிலையில் உள்ளனர். மேலும் அருகில் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்திற்கு சென்று படித்து வரும் மாணவர்கள் சத்துணவு சாப்பிட இப்பள்ளிக்கு வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் அவர்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்திற்கே சென்று வருகின்றனர். இதனால் மாணவர்கள் அலை கழிக்கப்படுவதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதோடு அனைத்து மாணவர்களுக்கும் மரத்தடியிலேயே வைத்து சத்துணவும் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே மழைக்காலத்தில் பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமல் பாதிக்கப்படும் நிலை உள்ளது எனவும், உடனே இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று இப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செண்பகமூர்த்தி, பள்ளி புரவலர் தியாகராஜன், கல்விக்குழு தலைவர் நீலமேகம் மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story