நெம்மேலியில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு


நெம்மேலியில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு
x

நெம்மேலியில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை காலை 6 மணி முதல் நாளை மறுதினம் காலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

சென்னை, 

நெம்மேலியில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில்(100 மில்லியன் லிட்டர் திறன்) சில முக்கியமான பராமரிப்பு பணிகள் 3-ந்தேதி(நாளை) காலை 6 மணி முதல் 4-ந்தேதி(நாளை மறுதினம்) காலை 6 மணி வரை நடைபெற உள்ளது. எனினும் வழக்கமான அளவு குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் குடிநீர் பற்றாக்குறை இருப்பின், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையார், வேளச்சேரி, பெசன்ட்நகர், சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, திருவான்மியூர், மயிலாப்பூர், மந்தைவெளி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம்.

அதற்காக தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்களின் செல்போன் எண்கள் வருமாறு:-

* துணை பகுதி பொறியாளர்(பகுதி-9) - 8144930230(மயிலாப்பூர், மந்தைவெளி)

* துணை பகுதி பொறியாளர்(பகுதி-13) - 8144930245(அடையார், வேளச்சேரி, பெசன்ட்நகர், திருவான்மியூர்)

* துணை பகுதி பொறியாளர்(பகுதி-14) - 8144930168(கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி)

* துணை பகுதி பொறியாளர்(பகுதி-15) - 8144930252(ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர்)

மேற்கண்ட தகவல் சென்னை குடிநீர் வாரிய மக்கள் தொடர்பு மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story