தர்மபுரிக்கு, நாளை டாக்டர் ராமதாஸ் வருகை பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்


தர்மபுரிக்கு, நாளை டாக்டர் ராமதாஸ் வருகை பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்
x
தினத்தந்தி 3 Aug 2018 4:15 AM IST (Updated: 3 Aug 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தர்மபுரியில் நாளை (சனிக் கிழமை) நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

தர்மபுரி,

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டங்களில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து பேசி வருகிறார். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் தர்மபுரி பென்னாகரம் ரோட்டில் உள்ள குமரன் திருமண மண்டபத்தில் நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்குகிறார். கட்சியின் மாநில துணைத்தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு தர்மபுரி மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள், பணிகள் குறித்து விளக்கி பேசுகிறார். கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மற்றும் கட்சியின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

இதுதொடர்பாக கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரியில் நடைபெறும் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story