குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டை அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு
கோவை குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தனர்.
கோவை,
கோவை குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
கோவை –பொள்ளாச்சி ரோடு குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டை அருகே டாஸ்மாக் மதுக்கடை திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தொழிற்பேட்டையில் பெண்கள் உள்பட ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே இங்கு டாஸ்மாக் மதுக்கடை திறக்கும் முடிவை அதிகாரிகள் கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story