சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை: அதிகாரிகள் உள்பட பலர் மீது வழக்கு
சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.
சேலம்,
சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், புரோக்கர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ.3 லட்சம், ஆவணங்கள் சிக்கியது. இதுதொடர்பாக அதிகாரிகள் உள்பட பலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
சேலம் உடையாப்பட்டியில் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஓட்டுனர் உரிமம், வாகன தகுதிச்சான்று பெறுதல் உள்ளிட்ட பலவற்றுக்கு புரோக்கர்கள் மூலம் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது. குறிப்பாக அம்மா திட்டத்தின் மூலம் ஸ்கூட்டர் பெறுவதற்காக ஓட்டுனர் உரிமம் பெற வரும் பெண்களிடம் லஞ்சம் வாங்குவதாக அதிக புகார்கள் சென்றன.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் மாலை கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் புரோக்கர்கள் பலர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். இதையடுத்து போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணியில் இருந்த கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
இந்த சோதனையின் போது ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த பணத்தை போலீசார் கண்டுபிடித்தனர். மொத்தம் ரூ.2 லட்சம் சிக்கியது. இதையடுத்து கணக்கில் வராத அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் அதிகாரிகளுக்கு முக்கியமாக 4 புரோக்கர்கள் மூலம் லஞ்ச பணம் செல்வது தெரியவந்தது.
இதில் 3 புரோக்கர்களின் அலுவலகங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 4 புரோக்கர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். இந்த சோதனை விடிய, விடிய நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு சோதனையை முடித்துக்கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சோதனையின் போது ரூ.1 லட்சம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் பல ஆவணங்கள் சிக்கின. அவற்றை அங்கிருந்து அதிகாரிகள் எடுத்து சென்றனர். இந்த சோதனையால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘ஓட்டுனர் உரிமம் பெறுவது உள்ளிட்ட பலவற்றுக்கு அதிகாரிகள் புரோக்கர்கள் மூலம் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரின் அடிப்படையில் மேற்கண்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் மொத்தம் ரூ.3 லட்சம் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. மேலும் வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், ஊழியர்கள், புரோக்கர்கள் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட அதிகாரிகள் மீது விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Related Tags :
Next Story