குப்பை கிடங்கை முழுவதுமாக அகற்றும் பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது கலெக்டர் தகவல்
அரியமங்கலம் குப்பை கிடங்கை முழுவதுமாக அகற்றும் பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது என்று கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.
திருச்சி,
திருச்சி மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்த 2 நாள் கண்காட்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள கர்ப்பரட்சகி மகாலில் நேற்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கி கண்காட்சியை திறந்து வைத்தார். மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், செங்கல்பட்டு மண்டல பொறியாளர் முருகேசன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, மாநகராட்சியின் தூய்மை தூதர் ஹலோ எப்.எம். சகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜாமணி பேசும்போது, “கடந்த 2015-16-ம் ஆண்டில் மத்திய அரசு தூய்மை நகரங்களுக்கான போட்டியை நடத்தியது. இதில் 70 நகரங்கள் கலந்து கொண்டன. அதில் திருச்சி மாநகராட்சி 3-வது இடத்தை பிடித்தது. 2016-17-ம் ஆண்டு நடத்திய போட்டியில் 400 நகரங்கள் பங்கேற்றன. அதில் திருச்சி மாநகராட்சி 6-வது இடம் பிடித்தது. 2017-18-ம் ஆண்டு நடத்திய போட்டியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகரங்கள் பங்கேற்றன. இதில் திருச்சி மாநகராட்சி 13-வது இடத்தை பிடித்தது.
என்னை பொறுத்தவரை திருச்சி மாநகராட்சி தூய்மையை பேணி காப்பதில் மேம்பட்டு தான் வருகிறது. கடந்த ஆண்டு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகம் இருந்தது. அதன்பிறகு மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பால் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு இல்லை. அரியமங்கலம் குப்பை கிடங்கை முழுவதுமாக அகற்றும் கடினமான பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது. பொதுமக்களும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக்கிற்கான மாற்று பொருளை பயன்படுத்த முன்வர வேண்டும்” என்று பேசினார்.
மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பேசுகையில், “மாநகராட்சியில் நாளொன்றுக்கு 450 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதில் 200 டன் குப்பைகள் நுண் உரம் செயலாக்க மையம் மூலம் உரமாக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள 250 டன் குப்பைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் பிரித்து தெடுக்கப்பட்டு தனியார் ஆலைகளில் விற்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. இதுவரை ரூ.2 கோடியை சுகாதார பணியாளர்களுக்கு வழங்கி உள்ளோம். தற்போது அரியமங்கலம் குப்பை கிடங்கிற்கு குப்பைகள் கொண்டு செல்லப்படுவது குறைந்து விட்டது. அங்கு குப்பைகள் கொட்டப்படுவதை முழுவதுமாக நிறுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று பேசினார்.
கண்காட்சியில் குப்பைகளை நவீனமுறையில் துர்நாற்றமின்றி உரமாக்கும் கருவிகள், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள், இயற்கை உரம் தயாரிக்கும் முறை, தையல் கடைகளில் தேங்கும் கழிவு துணிகளை பயன்படுத்தி மிதியடி தயாரிக்கும் முறை, சணல், மூங்கில்களால் செய்யப்பட்ட பொருட்கள் உள்பட 30 ஸ்டால்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டு இருந்தன.

Related Tags :
Next Story