மாவட்ட செய்திகள்

கார் கவிழ்ந்து விபத்து; பிளஸ்–2 மாணவர் பலி + "||" + Car crash accident; Plus-2 student kills

கார் கவிழ்ந்து விபத்து; பிளஸ்–2 மாணவர் பலி

கார் கவிழ்ந்து விபத்து; பிளஸ்–2 மாணவர் பலி
காரைக்குடி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் பிளஸ்–2 மாணவர் பரிதாபமாக இறந்துபோனார். 3 பேர் படுகாயமடைந்தனர்.

காரைக்குடி,

சென்னை வ.உ.சி.நகரை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி சுமதி(வயது 48). இவர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நேற்று முன்தினம் இரவு காரில் புறப்பட்டார். அவருடன் சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த பிளஸ்–2 படித்து வந்த முருகன் மகன் அஸ்வின்(17), தங்கராஜ், நாகவள்ளி ஆகியோரும் உடன் சென்றனர். காரை ஆனந்தன் என்பவர் ஓட்டிச் சென்றார்.

காரைக்குடி அருகே அமராவதிபுதூரை அடுத்த சங்கரபதிகோட்டை பகுதியில் கார் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. அப்போது சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவரில் கார் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த அஸ்வின், சுமதி உள்பட 5 பேரும் படுகாயமடைந்தனர்.

பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே அஸ்வின் பரிதாபமாக இறந்துபோனார். மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. உசிலம்பட்டி அருகே விபத்தில் 2 ஆயுதப்படை போலீஸ்காரர்கள் பலி; அதிர்ச்சியில் ஒருவரது தாயும் இறந்த பரிதாபம்
உசிலம்பட்டி அருகே நண்பரின் திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பியபோது நிகழ்ந்த விபத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர்கள் 2 பேர் பலியானார்கள். அதிர்ச்சியில் அவர்களில் ஒருவரது தாயும் உயிரிழந்தார்.
2. சத்தியமங்கலம் அருகே மில்லில் தீ விபத்து எந்திரங்கள்– மர பொருட்கள் எரிந்து நாசம்
சத்தியமங்கலம் அருகே மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த எந்திரங்கள் மற்றும் மர பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.
3. பொன்னேரி அருகே நிலக்கரி ஏற்றி சென்ற லாரி தடுப்பு சுவரில் மோதியது டேங்க் உடைந்து டீசல் கொட்டியது
பொன்னேரி அருகே நிலக்கரி ஏற்றி சென்ற லாரி தடுப்பு சுவரில் மோதியது. இதில் டேங்க் உடைந்து டீசல் கொட்டியது.
4. மாணவி மாடியில் இருந்து குதித்து சாவு: பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் முற்றுகை போராட்டம்
செல்போன் உபயோகித்ததை கண்டித்ததால் பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவி இறந்தார். இதையொட்டி மாணவர்கள் பள்ளி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. மதுரை அருகே தொழிலாளி வெட்டிக் கொலை; போலீஸ் தேடும் வாலிபரின் அண்ணன் திடீர் சாவு
சோழவந்தான் அருகே முன்விரோதத்தில் கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக தேடப்படும் வாலிபரின் அண்ணன் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.