தாராபுரத்தில், கோவில் அருகில் உள்ள பிரியாணி கடையை அகற்றக்கோரி போலீசில் புகார்


தாராபுரத்தில், கோவில் அருகில் உள்ள பிரியாணி கடையை அகற்றக்கோரி போலீசில் புகார்
x
தினத்தந்தி 6 Aug 2018 3:00 AM IST (Updated: 6 Aug 2018 12:08 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் என்.என்.பேட்டையில் உள்ள அகமுடையார் தெருவில் ஆதிபராசக்தி கோவில் மற்றும் விநாயகர் கோவில் உள்ளன.

தாராபுரம்,

தாராபுரம் இந்து முன்னணி பொது செயலாளர் கதிரேசன் மற்றும் நிர்வாகிகள் தாராபுரம் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:–

தாராபுரம் என்.என்.பேட்டையில் உள்ள அகமுடையார் தெருவில் ஆதிபராசக்தி கோவில் மற்றும் விநாயகர் கோவில் உள்ளன. இந்த கோவில்கள் அருகே கடை ஒன்றை வாடகைக்கு எடுத்த ஒருவர் பிரியாணி கடை வைத்துள்ளார். இதனால் கோவிலுக்கும் செல்லும் பக்தர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்தமனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்து முன்னணி நிர்வாகிகள் அங்கு சென்று பிரியாணி கடையை அகற்றக்கோரி முகமது இக்பாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று, பிரியாணி கடையை அப்புறப்படுத்துமாறு கடை உரிமையாளரிடம் கூறினார்கள். இதைதொடர்ந்து கடையை காலிசெய்வதாக கூறியதால், இந்து முன்னணி நிர்வாகிகளும், பக்தர்களும் கலைந்து சென்றனர்.


Next Story