மாவட்ட செய்திகள்

போலீஸ்நிலையம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் + "||" + Police Station Previously Farmers Struggle

போலீஸ்நிலையம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

போலீஸ்நிலையம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
அலங்காநல்லூர் போலீஸ்நிலையம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலங்காநல்லூர்,

அலங்காநல்லூரை அடுத்த கோட்டைமேடு ஊராட்சியை சேர்ந்தது பரளிகண்மாய். இதில் கோட்டைமேடு மற்றும் புதுப்பட்டி கிராமங்களுக்கு சுமார் 260 ஏக்கர் விவாசாய விளை நிலங்கள் இந்த கண்மாய்மூலம் பாசன வசதி பெறுகின்றன.இதற்கு முல்லை–பெரியாறு பிரதான கால்வாய் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் கண்மாய்க்கு நீர் வரும் பாதையில் தனிநபர்கள் தடுப்பணை அமைத்து நீரினை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் கண்மாய்க்கு வரவேண்டிய தண்ணீர் முழுமையாக வரவில்லை.இதனால் கண்மாய் பாசன விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பாசன விவசாயிகள் மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர், பொதுப்பணித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

மேலும் தடுப்பணைகள் அமைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க லியுறுத்தி அலங்காநல்லூர் போலீஸ் நிலையம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.இதைதொடர்ந்து விவசாயிகள் புகார் மனுவை கொடுத்துவிட்டு சென்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. ஆனைமலையாறு–நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் பேரணி; கலெக்டரிடம் மனு கொடுத்தனர்
ஆனைமலையாறு–நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி திருப்பூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
2. கரூர்–கோவை 6 வழி பசுமைச்சாலை திட்டத்தால் பாதிப்பு கைவிடக்கோரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு
கரூர்– கோவை இடையே 6 வழி பசுமைச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், இதனை கைவிடக்கோரியும் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
3. கோவை அவினாசி ரோட்டில் தடையில்லா போக்குவரத்து திட்டம் மீண்டும் செயல்படுத்த போலீஸ் கமி‌ஷனர் உத்தரவு
20 நிமிடத்துக்குள் விமானநிலையம் சென்றடையும் வகையில், கோவை அவினாசி ரோட்டில் தடையில்லா போக்குவரத்து திட்டத்தை மீண்டும் செயல்படுத்த போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார்.
4. காரியாபட்டி அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம்
காரியாபட்டி அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம் நடத்தினார்கள்.
5. தாராபுரத்தில் தண்ணீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தில் பெண்கள் தர்ணா
தாராபுரத்தில் தண்ணீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை