தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டண கொள்ளையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்


தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டண கொள்ளையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்
x
தினத்தந்தி 5 Aug 2018 10:30 PM GMT (Updated: 5 Aug 2018 8:46 PM GMT)

தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டண கொள்ளையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட இந்திய மாணவர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தின் 5-வது மாவட்ட மாநாடு பெரம்பலூரில் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் செயலாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். நிவாஸ், முகிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செல்வகுமார் தொடக்க உரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணை தலைவர் நிருபன், செயற்குழு உறுப்பினர்கள் பிரகாஷ், அருணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில் தனியார் பள்ளி, கல்லூரிகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி, வேளாண்மை மற்றும் பொறியியல் கல்லூரியை உடனடியாக தமிழக அரசு தொடங்க வேண்டும். அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் பேரவை தேர்தலை அரசு நடத்த வேண்டும்.

அரசு பள்ளி, கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை அரசு மேம்படுத்த வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக அரசு வாபஸ் வாங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்கத்தின் மருத்துவ மாணவர் பிரிவின் முன்னாள் மாநில தலைவர் டாக்டர் கருணாகரன், முன்னாள் மாவட்ட தலைவர் ரமேஷ், செயலாளர் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story